Categories
விளையாட்டு

ராஜஸ்தான் VS குஜராத்…. 4-வது வெற்றியை தட்டி தூக்குவது யார்?…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!!

IPL 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. 20-வது நாளான இன்று இரவு 730 மணிக்கு நடைபெறும் 24 வது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான், ராயல்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த  இருஅணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனிடையில் நிகர ரன் ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் முதல் இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் 5-வது இடத்திலும் இருக்கின்றன.

இதன் காரணமாக 4வது வெற்றியை பெறப்போவது யார் என ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணி ஐதராபாத்தை 61 ரன்வித்தியாசத்திலும், மும்பையை 21 ரன்னிலும், லக்னோவை 3 ரன்னிலும் வீழ்த்தியிருந்தது. பெங்களூர் அணியிடம் 4 விக்கெட்டில் தோல்வியடைந்தது. குஜராத் அணி லக்னோ, டெல்லி, பஞ்சாப் போன்றவற்றை தொடர்ச்சியாக தோற்கடித்தது. பின் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. இருஅணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இந்தஆட்டம் மிகவும் மும்முரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |