மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது மோட்டார் சைக்கிளில் பேயனப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.