தமிழ் ஆசிரியராக பணிபுரியும் நபர் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததால் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையிலுள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையில் வசித்து வருபவர் ஹரி மஞ்சன். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். ஹரி மஞ்சன் வீட்டில் அவருடைய உறவினரின் பெண்ணான 14 வயது சிறுமி தங்கியிருந்து அங்குள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சிறுமியின் உடல் நலம் பாதிப்படைந்ததல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர் லலிதாவிடம் தெரிவித்துள்ளனர்.அவர் இதுபற்றி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டையில் தோட்ட வேலைக்காக சென்றது தெரியவந்தது. இதனால் சிறுமி நெருங்கிய உறவினரான ஹரி மஞ்சள் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.
மேலும் ஹரி மஞ்சன் உறவினர் மகள் என்றும் பார்க்காமல் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தமிழாசிரியர் ஹரி மஞ்சனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.