Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நிறுத்திவைக்கப்பட்ட வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணி”… மீண்டும் தொடங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்…!!!!

வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணியை தொடங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணியானது ஓராண்டுக்கு முன்பாக ரூபாய் 1 கோடியே 65 லட்சம் செலவில் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அது நின்று விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.

இதனால் சாலைப் பணியை மீண்டும் உடனடியாக தொடங்கும் மாறும், விரைந்து சாலையை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உதவி செயற்பொறியாளர் வருகின்ற மே மாதம் 30ஆம் தேதிக்குள் சாலை பணியை முடித்து தருவதாக வாக்களித்ததால் மக்கள் மறியலிருந்து கலைந்து சென்றார்கள்.

Categories

Tech |