Categories
தேசிய செய்திகள்

கலப்பு திருமணம் செய்த அரசியல் கட்சி நிர்வாகி…. கேரளாவில் பரபரப்பு….!!!!

கேரளமாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள தேயப்பரா பகுதியில் யோஷ்னா மேரி ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் சவுதி அரேபியாவில் நர்சாக பணியாற்றி வந்தார். இதனிடையில் யோஷ்னா மேரிக்கு திருமணம் முடித்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் திருமண நிச்சயதிற்காக யோஷ்னாகடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரளா வந்தடைந்தார். இதையடுத்து திருமண நிச்சயதார்த்தத்திற்கு சில தினங்களே இருந்த சூழ்நிலையில் யோஷ்னா பெற்றோருக்கு தெரியாமல் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி ஷஜீன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

இதில் இஸ்லாமியம் மதமுடைய ஷஜீன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், இளைஞர்பிரிவான இந்திய ஜனநாயகம் கூட்டமைப்பின் கோழிக்கோடு கண்ணோத் பகுதி தலைவராக செயல்பட்டு வருகிறார். அதாவது யோஷ்னா மற்றும் ஷஜீன் 7 மாதங்களாக காதலித்து வந்து உள்ளனர். பெற்றோர் வேறு நபருடன் திருமணம் செய்து வைக்க இருந்ததால் யாரிடமும் கூறாமல் வீட்டைவிட்டு வெளியேறிய யோஷ்னா ஷஜீனை திருமணம் செய்து கொண்டார். கிருஸ்தவம் -இஸ்லாம் மதங்களை சேர்ந்த இருவரும் கலப்புத் திருமணம் செய்துகொண்டுள்ள சூழ்நிலையில் இந்த திருமணத்துக்கு யோஷ்னாவின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தன் மகளை காணவில்லை என யோஷ்னாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் ஷஜீன் அந்த கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் யோஷ்னாவின் பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதேபோன்று யோஷ்னாவை லவ் ஜீகாத் எனப்படும் இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் நோக்கில் ஷஜீன் திருமணம் செய்து கொண்டதாக யோஷ்னாவின் பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். அதே சமயம் தன் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே ஷஜீனை திருமணம் செய்து கொண்டதாக யோஷ்னா தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் கோர்ட்டிற்கு சென்ற நிலையில் யோஷ்னாவும், ஷஜீனும் இணைந்து வாழ எந்த தடையும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் பல கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

Categories

Tech |