தமிழகத்தில் தற்போது மின்னணு ரேஷன் கார்டுகள் எனப்படும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட் ரேஷன் கடைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வைத்து ஏழை எளிய மக்கள் நியாயவிலைக் கடைகளில் இலவசமாக அரிசி, மலிவு விலையில் உணவு தானியங்கள், எண்ணெய் ஆகியவற்றை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
மேலும் இந்த ரேஷன் கார்டு அடையாளச் சான்றாகவும் பயன்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது பழைய ரேஷன் கார்டு உங்களிடம் இருந்தால் அதை ஸ்மார்ட் ரேஷன் கார்டாக எளிதாக மாற்றலாம். அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
https://www.tnpds.gov.in/ என்ற பொது விநியோக திட்ட இணையதளத்துக்கு செல்லவும்.
அதில் உள்ள மின்னணு அட்டை சேவைகள் பிரிவில் உள்ள ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ பிரிவை தேர்வு செய்யவும்.
விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பதிவிடவும்.
பின்னர் உங்கள் குடும்பத் தலைவரின் படத்தை பதிவேற்றவும்.
இருப்பிடச் சான்றின் படத்தை பதிவேற்றவும்.
Submit பட்டனை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு ஒரு Reference Number வழங்கப்படும். அதன் மூலம் உங்கள் ரேஷன் கார்டு நிலவரத்தை பார்க்கலாம்.
உங்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும்.