Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தடை செய்ய வேண்டும்…. மக்கள் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்…. கடலூரில் பரபரப்பு….!!

அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள பாலக்கரையில் அனைத்து மக்கள் சேவை இயக்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்டச் செயலாளர் வீரமணி தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் பொருளாளர் ஞானமுத்து மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் ராமேஸ்வரி, செயலாளர் கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளர்.

இதனையடுத்து மாநிலத் தலைவர் தங்கம் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியுள்ளார். பின்னர் பெண்ணாடம் தர்காவில் பெண்ணுக்கு பேய் பிடித்ததாக கூறி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும், தமிழகம் முழுவதும் இருக்கும் தர்காவில் பேய், பிசாசு, பில்லி சூனியத்தை தடை செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

Categories

Tech |