Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எல்லாம் எப்படி இருக்கு?…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை  மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் சுகாதார பணி இணை இயக்குனர் திலகம், உதவி ஆட்சியர் பிரபாகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, தாசில்தார் கணேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  மருத்துவமனையில் அமைந்துள்ள குடிநீர், கழிவறை, ஆபரேஷன் தியேட்டர், பிரசவ வார்டு, வளாகம் போன்றவற்றை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அறுவகை  சிகிச்சைக்கு  கூடுதலாக வார்டுகள் அமைக்கவும், அதிகமான  தூய்மை பணியாளர்களை பணிக்கு அமர்த்தவும்  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |