விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் ஹரிஹரன் (எ) சரவணன், மாடசாமி, பிரவீன், ஜூனத் அகமது மற்றும் 4 பள்ளி மாணவர்களை கடந்த மார்ச் 21ம் தேதி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தருவதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வழக்கை சிபிசிஐடி உத்தரவிட்டிருக்கிறார்.
அதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையில் ஹரிஹரன், பிரவீன், ஜூனத் அகமது, மாடசாமி ஆகியோரின் காவலையும் ஏப்.18 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் ஹரிஹரன், பிரவீன்,ஜூனத் அகமது, மாடசாமி போன்றவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட மாவட்ட கலெக்டர் மேகநாதன் கட்டி உத்தரவிட்டிருக்கிறார். இதனை அடுத்து நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.