உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று வாட்ஸ் ஆப். இது பல்வேறு சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. பண பரிவர்த்தனை சேவைகளும் இதில் உள்ளன. இந்தியாவில் முன்னணி யூபிஐ சேவைகளில் ஒன்றாக வாட்ஸ் ஆப் உள்ளது. என்ன ஏமாத்துறாங்க இருந்தாலும் குறைந்த அளவிலான பயனர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த வாட்ஸ் ஆப் பே 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் விரிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே நான்கு கோடி பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ் ஆப் பே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது, தற்போது மேலும் கூடுதலாக 6 கோடி பயனர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் பேஇந்தியாவில் அனுமதிக்கப்பட்டபோது 2 கோடி பயனர்களுக்கு மட்டுமே சேவையை வழங்க அனுமதிக்கப்பட்டது. கடந்த வருடங்களில் அது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இது விரைவில் 50 கோடியாக மாற்றும் அளவிற்கு சேவையை அந்நிறுவனம் விரிவுபடுத்த உள்ளது.