Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மீனவர்கள் கவனத்திற்கு” நாளை முதல் கடலுக்கு செல்ல தடை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழக அரசின் கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாளை முதல் வருகின்ற ஜூன் 14-ஆம் தேதி வரை 60 நாட்களுக்கு மீன்களின் வளத்தை பாதுகாப்பதற்காக மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே நமது மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் படகுகளில் கடலுக்கு  மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் தடையை மீறி மீன்பிடிக்க சென்றால்   கடல்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |