Categories
அரசியல் மாநில செய்திகள்

கழகக் கட்டுப்பாட்டை மீறிய அதிமுக நிர்வாகிகள் நீக்கம்…. அதிமுக தலைமை அதிரடி….!!!!

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சிலர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை நீக்கியுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் கழகத்தின் கொள்கைகுறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கீழ்கண்டவர்கள் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மேற்கு மாவட்டம்,  சந்திரா சவடமுத்து, சத்தியபிரியா பாலமுருகன்,  பார்த்திபன்,  காளிமுத்து, கி. ஜானகி, புஷ்பவள்ளி, இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட சவடமுத்து, பாலமுருகன், ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

Categories

Tech |