Categories
அரசியல்

ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. டிசிஎஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!

 

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி மார்ச் காலாண்டுக்கான வருவாய் விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டது. அதில் பேசிய நிறுவனத்தின் லாபம் மொத்தமாக 7 சதவீதம் உயர்ந்து 9,926 கோடி ரூபாயாக உள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் முதல் முறையாக 50 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மார்ச் காலாண்டில் டிசிஎஸ் வருவாய் 16 சதவீதம் உயர்ந்து 50,591 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. 2022 ஆம் நிதி ஆண்டில் ஊழியர்களுக்கு 6% முதல் 8 சதவீதம் சம்பள உயர்வு வழங்கியதாகவும், அதனைப்போலவே நடப்பு நிதியாண்டில் சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் காலாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய ஊழியர்களை டிசிஎஸ் நிறுவனம் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |