Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் முறை…. மக்கள நல்வாழ்வுத்துறை திட்டங்கள்…. முதல்வர் தொடங்கி வைத்தார்….!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ரூபாய் 364 புள்ளி 22 கோடி செலவில் 516 படுக்கைகள் கொண்ட பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள், 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் மற்றும் ரூபாய் 65 கோடி செலவில் சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

இதற்கிடையில் கடந்த 2021 -2022 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாட்டின் முதல் முறையாக 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பன்முக உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் 25 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள். மேலும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பு மையங்களுடன் கூடிய 1,583 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிரந்தது.

அந்த வகையில் ரூபாய் 266 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள்,  36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் வட்டார அளவில் உள்ள 139 அரசு மருத்துவமனைகளில் அமைந்துள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்கள் ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.

இந்த சிகிச்சை பிரிவுகளில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் வகையில் தீவிர சிகிச்சைப் படுக்கைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முக்கிய உடலியக்கச் செயல்பாடுகள், தொடர்ச்சியாக மருத்துவ தரவுகள் வாயிலாக நேரடியாக செவிலியர் கட்டுப்பாட்டு மையத்திலுள்ள கண்காணிப்பு திரையில் காட்சிப்படுத்தப்பட்டு வரும். தற்போது வரை தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒவ்வொரு நோயாளியின் உடலியக்க நிலையை செவிலியர்கள் தனித்தனியே அவர்களது படுக்கைக்கு சென்று கண்காணிக்கும் நிலை மாறி  அனைவரின் நிலையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கண்காணிக்க முடியும். இப்புதிய முறை அரசு மருத்துவமனைகளில் அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலமாக நோயாளிகளின் உடலியக்க தன்மைக்கேற்ப உரிய சிகிச்சை சரியான நேரத்தில் சிறப்பு மருத்துவக் குழுவினரால் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்படும்.

இதனை தொடர்ந்து 97 கோடியே 49 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தலா ரூபாய் 2 கோடியே 27 இலட்சம் செலவில் 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 516 படுக்கைகளுடன் கூடிய பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

இப்பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் படுக்கைகள் ஒவ்வொன்றுடனும் உயர்ரக மருத்துவக் கருவிகளான, மல்டிபாராமானிட்டர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், சிபேப் , இசிஜி, எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், சிரிஞ் பம்ப், என்டோடிரக்கியல் கப் மானோமீட்டர் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தீவிர சிகிச்சைப் படுக்கைகள் அனைத்தும் ஒருங்கிணைந்த மத்திய செவிலியர் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து 65 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி அருகில் 2,93,000 சதுர அடி பரப்பளவில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிறுவன வளாகத்தில் மருத்துவமனைக் மற்றும் கல்லூரிக் கட்டடம், மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள், பொது சமையலறை மற்றும் உணவுக்கூடம், இயக்குநர் மற்றும் நிலைய மருத்துவர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இயற்கை மருத்துவச் சிகிச்சைகளான நீர் சிகிச்சை, அக்குபஞ்சர், அக்குபிரஷர், யோகா கிரியா சிகிச்சைகள், மண் சிகிச்சை போன்ற சிகிச்சைகளும், யோகா பயிற்சிகளும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும். மேலும், 100 மாணவர்கள் பயிலக்கூடிய 51/2 ஆண்டு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் 30 மாணவர்கள் பயிலக்கூடிய 3 ஆண்டு மருத்துவப் பட்ட மேற்படிப்புகளும் வழங்கப்படும்.

மேலும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் சார்பில் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 30 கோடியே 9 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் நூலகக், விடுதிக், தேர்வுக்கூடம், சீமாங் கட்டடம். மேலும் தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் 2 கோடியே 66 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன சமையலறை, உதகமண்டலம் – அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள செவிலியர் பள்ளி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 62 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்கள், பயிற்சி மருத்துவர் குடியிருப்புகள், உள்ளிருப்பு மருத்துவர் குடியிருப்புக் கட்டடம், நோய் குறியியல் கூடுதல் செயல் விளக்கக் கட்டடம் மற்றும் பிணஅறுவை மற்றும் ஆராய்ச்சிக் கட்டடம், காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் 16 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் அறை மற்றும் சாய்தள வசதி.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகக் கட்டடம், புதுக்கோட்டையில் 1 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகக் கட்டடம், திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி மற்றும் திருவாலங்காடு ஆகிய இடங்களில் 2 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், களப்பால் மற்றும் குளிக்கரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், திருவண்ணாமலை மாவட்டம், நம்மியம்பட்டில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், என 124 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை வாயிலாக 108 இலவச அவசரகால ஊர்தி சேவையை மேலும் செம்மைப்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் சாலைப்பாதுகாப்பு மாதிரி வழித்தடத்தில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-II நிதியின் கீழ் 5 கோடியே 34 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இருபது எண்ணிக்கையிலான 108 அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Categories

Tech |