ஆசியாவிலேயே ஐந்து நிலை ராஜகோபுரம் மற்றும் விநாயகருக்கு தனி சன்னதியுடன் அமைந்திருக்கும் திருக்கோவில் நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் தான். மிகவும் பழமை வாய்ந்த விநாயகர் திருக்கோயில்களில் ஒன்றான மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவிலில் சித்திரை முதல்நாள் விநாயகர் விக்கிரகம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்று உள்ளது.
இந்த விழாவினை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் போன்ற சிறப்புயாக வேள்விகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உச்சிஷ்ட கணபதிக்கு பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் விநாயகர் விக்ரகம் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழும் அதனையொட்டி மகாதீபாராதனை நடைபெற்றது.
மேலும் சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்குரிய சூரிய கதிர்கள் விநாயகர் மீது விழும் இந்த கோயில் அமைத்திருப்பது இதன் மூலம் சூரிய பகவான் விநாயகரை நேரடியாக தரிசனம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் மழை நடந்து வருவதால் இந்த கோயில்கள் பக்தர்கள் மத்தியில் புகழ்பெற்று வருகிறது.