Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

புகையிலை பொருட்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பருவாய்-இடையர்பாளையம் சாலையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்ததோடு அவரிடமிருந்த 300 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |