மதுபாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் ராஜமணியபுரம் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பதும், மேலும் அவர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜெயக்குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்த 11 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.