புதுக்கோட்டையில் போதை ஊசியை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புல்பண்ணை பகுதியில் போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது அங்கு ஒரு கும்பல் போதை ஊசியை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் புதுக்கோட்டை வடக்கு நான்காம் வீதியைச் சேர்ந்த ஷியாம் கிரிஸ்டோபர், மச்சுவாடி சேர்ந்த ஹரிஹரசுதன், கோவில்பட்டியை சேர்ந்த பாண்டியன், அன்னசத்திரத்தை சேர்ந்த விக்னேஷ்வர் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்த 20 மாத்திரைகள் மற்றும் 10 ஊசிகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.