Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே புகுந்த காட்டுப்பன்றி…. வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மொபட்டில் இருந்து தவறி விழுந்து 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே கேர்கம்பை‌ கிராமத்தில் நிகில் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜானகி என்பவருடன் சேர்ந்து மொபட்டில் நெடுகுளா கிராமத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் செல்லும் வழியில் திடீரென சாலையின் குறுக்கே ஒரு காட்டுப்பன்றி வந்துள்ளது. இந்த காட்டுப்பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக நிகில் மொபட்டை நிறுத்தியுள்ளார்.

அப்போது திடீரென மொபட் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நிகில் மற்றும் ஜானகி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |