Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“காரையூர், மேலைச் சிவபுரியில் சிறப்பாக நடந்த மீன்பிடி திருவிழா”… உற்சாகத்துடன் பங்கேற்ற மக்கள்…!!!!

மேலைச்சிவபுரி, காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்று உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் அருகே இருக்கும் வையாபுரி நவடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, கச்சா, தூரி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு மீன்களைப் பிடித்தார்கள். அதில் கெளுத்தி, குறவை, ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட பலவகை மீன்கள் கிடைத்தது.பொதுமக்கள் இதை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டார்கள்.

இதைப்போலவே காரையூர் அருகே இருக்கும் கண்டெடுத்தான் பட்டியில் ஊரணி கண்மாய், சானா கண்மாய் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் மீன்களைப் பிடித்தார்கள். பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரியில் இருக்கும் பாஞ்சாலங்குறிச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசிய பின்பு மக்கள் மீன்களை பிடிக்க ஆரம்பித்தார்கள்.

Categories

Tech |