Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் உடனான உறவை நாங்கள் மதிக்கிறோம்”…. பிரபல நாடு பெருமிதம்…!!!!!!

பாகிஸ்தான் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற  ஷபாஸ் ஷெரீப்பிற்கு அமெரிக்கா வாழ்த்து கூறியுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதன் காரணமாக இம்ரான் அரசு கவிழ்ந்து உள்ளது. அங்கு உள்ள முன்னாள் முதல்வர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷபாஸ் ஷெரீப் (வயது 70) பிரதமராகி உள்ளார். அவருக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏறத்தாழ 75 ஆண்டுகளாக பரந்த பரஸ்பர நலன்களில் பாகிஸ்தான் முக்கிய கூட்டாளியாக இருக்கிறது. பாகிஸ்தான் உடனான உறவை நாங்கள் மதிக்கின்றோம்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அமெரிக்கா வாழ்த்துகிறது. மேலும் வலுவான, நீளமான ஜனநாயக பாகிஸ்தானில் இரு நாடுகளின் நலன்களும் இன்றியமையாததாக அமெரிக்கா கருதுகிறது என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோன் சம்பிரதாயப்படி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து கூற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதேபோன்று இம்ரான் கானுடன் அவர் பதவி இழக்கும் வரையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒருமுறைகூட தொலைபேசியில் அழைத்து பேசவில்லை.

Categories

Tech |