Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் கோவில்…. நடைபெற்ற சித்திரை திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!!

பாலகிருஷ்ணன் பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் கோட்டை பகுதியில்  பிரசித்தி பெற்ற பாலகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் நகரின் முக்கிய வழி வழியாக பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றை  வந்தடைந்தார்.

அதன் பின்னர் கள்ளழகர் வேடம் அணிந்து  வந்த பக்தர்கள் பாலகிருஷ்ண பெருமாள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்தனர்.  மேலும் திருவிழாவிற்கு  தேவையான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் மற்றும் யாதவர் சமுதாயம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |