Categories
டென்னிஸ் விளையாட்டு

முத்தமுடன் சிறுமியிடம் மன்னிப்பு கேட்ட நடால்….!!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தின்போது பந்தை எடுத்து தரும் சிறுமையை தாக்கியதால் நடால் அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், அர்ஜென்டினாவின் ஃபெட்ரிகோ டெல்போனிஸுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-3, 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து மூன்றாம் சுற்று போட்டியில் அவர் சக நாட்டைச் சேர்ந்த பப்லோ புஸ்டாவை எதிர்கொள்ளவுள்ளார்.

இதனிடையே இப்போட்டியின் மூன்றாம் செட் ஆட்டத்தின்போது டெல்போனிஸின் சர்வீஸில் நடால் அடித்த பந்து, வலைப்பக்கம் இருக்கும் பந்தை எடுத்துதரும் சிறுமியை தாக்கியது. இதையடுத்து, உடனடியாக அந்த சிறுமியிடம் மன்னிப்பு கேட்டு கன்னத்தில் முத்தமிட்டார். நடாலின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது.

Categories

Tech |