Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மும்மரமாக நடைபெற்ற போதை ஊசி விற்பனை…. கும்பலோடு தூக்கிய போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புல்பண்ணை பகுதியில் சட்டவிரோதமாக போதை ஊசி விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக போதை ஊசியை விற்பனை செய்வது  தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் போதை  ஊசியை  விற்பனை செய்த கிரிஸ்டோபர், ஹரிஹரசுதன், பாண்டியன், விக்னேஷ்வர் ஆகிய 4 பேரை  கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து  20  போதை மாத்திரைகள் மற்றும் 10 ஊசியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |