Categories
ஆட்டோ மொபைல்

மஹிந்திரா வாகனங்கள் விலை அதிரடி உயர்வு…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

மஹிந்திரா நிறுவனம் அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் 2.5% விலையை உயர்த்து வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

அதன்படி 10,000 முதல் 63 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் இரும்பு, அலுமினியம், பலேடிஎம் ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்தச் செய்தி கார் வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |