தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் ஆகும். இந்த நாளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கூடாது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை மற்றும் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Categories