Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாடு…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |