Categories
சினிமா தமிழ் சினிமா

KGF2 படம்: வெளியான சுவாரஸ்ய தகவல்…. ஆச்சரியம் ஆனா அது தான் உண்மை….!!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட மொழியில்  வெளியான படம்  கேஜிஎப். இந்தப் படம் வெளியாகும்போது எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் தான் வெளியானது. ஆனால் போகப்போக இந்தப் படம் ரசிகர்களை ஆட்கொண்டது என்னதான் சொல்ல வேண்டும். மிகவும் உணர்ச்சிகரமான வசனங்கள், அசாதாரண சண்டைக்காட்சிகள் என படம் பார்க்கும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கேஜிஎப் இதனை தொடர்ந்து தற்போது மூன்று வருடங்கள் கழித்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது.

யாஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் இன்று வெளியாக உள்ள கேஜிஎப் 2 படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் எடிட்டர் ஒரு கொள்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. கேஜிஎப் எனும் பிரமாண்ட படத்தை எடிட் செய்த உஜ்வல் குல்கர்னியின்  வயது பத்தொன்பது தானாம். இதற்கு முன் சில குறும்படங்களை எடிட் செய்துள்ளார் இவர்.இதைத்தொடர்ந்து KGF முதல் பாகம் பற்றி சிறு வீடியோ ஒன்றை எடிட் செய்து உஜ்வல் வெளியிட்டிருக்கிறார்.  அந்த விடியோவை இயக்குனர் பிரசாந்தின் மனைவி பார்த்து ஆச்சர்யப்பட்டு தன் கணவரிடம் காட்டியிருக்கிறார். அந்த விடியோவை பார்த்து அசந்து போன பிரஷாந்த்  KGF இரண்டாம் பாகத்தின் எடிட்டராக உஜ்வல் குல்கர்னியை தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக முழு அர்ப்பணிப்புடன் இயக்குனரிடம் பணியாற்றிய உஜ்வல் எடிட்டிங் வேலைகளை செம்மையாக செய்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியானபோது எடிட்டிங் பாராட்டப்பட்ட நிலையில் இன்று படம் வெளியானபிறகு ஒட்டுமொத்த ரசிகர்களும் எடிட்டர் உஜ்வல் குல்கர்னியை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்தாகும்.

Categories

Tech |