Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பதிவாளர்….. தணிக்கை துறையினர் குற்றச்சாட்டு….. துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை…..!!

காந்தி கிராம பல்கலைகழகத்தின் பதிவாளரை பணியிலிருந்து  இடை நீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் சிவகுமார் என்ற நபர் பொறுப்பாளர் பதவியில் பணியாற்றி வருகின்றார். ஆறு மாதங்களில் இவரது பணி முடிவடைய இருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.

இந்த  அறிவிப்பில் பதிவாளர் பணியிலிருந்த சிவகுமாரின் பெயரையும் படத்தையும் நீக்கி  பேராசிரியரான சேதுராமனின் புகைப்படத்தை வைத்து அந்த பல்கலைக்கழகத்தின்  பொறுப்பு பதிவாளர் என இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து  பல்கலைக்கழக சார்பில் விளக்கம் கேட்டனர். அப்போது பதிவாளர் சிவகுமார் மீது தணிக்கை துறையினர் சார்பாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அதற்கான விசாரணை நடந்து வருவதால் அதிலிருந்து சிவகுமார் தப்பிப்பதற்காக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு தெரியாமலும், ஒப்புதல் பெறாமலும் தணிக்கைத் துறைக்கு கடிதம் எழுதியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவாளர் சிவகுமார் தொடர்ந்து பதவியில் இருந்தால் விசாரணையில் கால தாமதம் ஏற்படும் என்று துணைவேந்தர் கூறியுள்ளார் .

இதை தொடர்ந்து நேற்று மாலை துணைவேந்தர் ரங்கநாதன் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்  காந்திகிராம பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான பேராசிரியர் சேதுராமன்  புதிதாக நியமித்துள்ள  பொறுப்பு பதிவாளர்  பதவியை  உடனடியாக  ஏற்றுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |