Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூரில் பரபரப்பு!!…. அம்பேத்கரின் பிறந்தநாள் விழா” திடீரென வாலிபருக்கு நடந்த கொடூரம் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் இந்திரா நகரில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் இளம் சிறுத்தை பாசறையின் ஒன்றிய துணை செயலாளரான சின்னத்துரை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துரை அதே பகுதியில் நடைபெற்ற அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கட்சியினருடன் சேர்ந்து பேனர் அமைக்கும்   பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது திடீரென  மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சின்னத்துரை  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த கார்த்திகேயன், சபரிநாதன், புண்ணியமூர்த்தி, மனோஜ் ஆகிய 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்துரையின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |