ட்விட்டர் நிறுவனத்தினுடைய அனைத்து பங்குகளையும் 41 மில்லியன் டாலருக்கு வாங்க தயாராக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.
ட்விட்டர் நிறுவனத்தில் டெஸ்லா நிறுவன தலைவரான எலான் மஸ்க் 9% பங்குகளை வைத்திருக்கிறார். எனினும், அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெறப்போவதில்லை என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அடுத்த இரண்டு நாட்களிலேயே அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் 41 மில்லியன் டாலருக்கு வாங்க தயார் என்று அறிவித்திருக்கிறார்.
இது பற்றி ட்விட்டர் நிறுவனத்தினுடைய தலைவரான பிரெட் டெய்லருக்கு நேற்று முன்தினம் அவர் அனுப்பிய கடித விவரம் இன்று வெளியாகியிருக்கிறது. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, உலகம் முழுக்க சுதந்திர பேச்சுக்குரிய தளமாக இருக்கும் என்று நம்பி முதலீடு செய்திருந்தேன்.
ஆனால் தற்போதிருக்கும் வடிவத்தில் சமூகத்திற்கு ட்விட்டர் நிறுவனத்தினால் சேவை செய்ய இயலாது என்று உணர்ந்திருக்கிறேன். அந்நிறுவனம் ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும். என் கருத்து பரிசீலனை செய்யப்படவில்லை எனில் பங்குதாரராக இருக்கக்கூடிய என் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என்று கூறியிருக்கிறார்.