Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“துணை நடிகைகளை கேவலமாக நடத்தும் சினிமா உலகம்”… உருக்கமாக பேட்டியளித்த நீலு ஆண்டி…!!!

துணை நடிகைகள் படம் கஷ்டம் பற்றி உருக்கமாக பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகை நீலு.

படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்து பிரபலமானவர் நீலு. இவர் சிங்கம் புலி  படத்தில் ஜீவாவுடன் சில காட்சிகளில் நடித்து இருப்பார். சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் அதன் மூலம் அவர் இளைஞர்களை கவர்ந்தார். இவர் ஆயுத எழுத்து, புலி, ஆஞ்சநேயா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் துணை நடிகைகள் படும் கஷ்டங்களைப் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, படப்பிடிப்புத் தளத்தில் எங்களுக்கு சரியான கழிவறை வசதி இருக்காது. உக்காரா சேர் தர மாட்டார்கள். உடை மாற்றுவதற்கு அரை இருக்காது.

முன்னணி நடிகைகள் துணை நடிகைகளை பார்த்தாலே விரோதிகள் போல பார்ப்பார்கள். பிறகு படப்பிடிப்பில் குட்டியான உடைகளை அணிந்துகொண்டு நடிக்க சொல்வார்கள். சிலர் நடிக்க முடியாது என மறுத்து சென்றுவிடுவார்கள். பணமும் தர மாட்டார்கள். வேறு வழியில்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த உடை போட்டுகொண்டு நடிக்க வேண்டும். இது போன்ற பல பிரச்சனைகளை துணை நடிகைகள் சந்தித்துதான் பயணிக்க வேண்டும். ஆனால் நாங்கள் படும் கஷ்டம் வெளியில் பார்ப்பவர்களுக்கு யாருக்குமே தெரியாது. பல திரைப்படங்களில் நடித்தாலும் எங்களுக்கு என சினிமாவுலகில் அங்கீகாரம் இல்லை என உருக்கமாக பேட்டியில் கூறியுள்ளார். இவர் இப்படிப் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |