மிதுனம் ராசி நேயர்கள்!!…
இன்று பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள் .மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் குழப்பம் போன்றவை ஏற்பட்டு. பின்னர் சரியாகும் .
இன்று கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை வர கூடும் . கூடுமானவரை பேசும் போது நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இன்று நீங்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும் பிள்ளைகளிடமும் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். உறவினரிடம் இன்று எந்த ஊதியம்மும் தராமல் இருப்பது நல்லது. யாருக்கும் பணம் கடன் வாங்கிக் கொடுக்காதீர்கள் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடினமாக உழைத்து படியுங்கள். நன்றாக புரிந்துகொண்டு பாடங்களைப் படியுங்கள் படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் .ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கருப்பு தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் .
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்