வாத்தி திரைப்படத்தில் தனுஷ் கதாபாத்திரமும் கதை பற்றிய சில தகவல்களும் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தனுஷ் வாத்தி, நானே வருவேன் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து வாத்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்கப்படுகின்றது.
இத்திரைப்படத்தில் தனுஷ் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த படமானது கல்வி மாபியாவை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றதாம். கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் தனுஷ் கல்வியை தனியார் மயமாக்குவதை எதிர்த்து தனியாளாக போராடுகின்றாராம். தனுஷ் இந்த படத்தில் பெரிய பொறுப்பை கையில் எடுத்து நடிக்கின்றார். இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார் குறிப்பிடத்தக்கது.