Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“விடுதிகளில் தங்க வரும் வெளிநாட்டவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்”… உரிமையாளர்களுக்கு வேலூர் சூப்பிரண்டு அறிவுரை…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் தங்க வரும் வெளிநாட்டவர்கள் பற்றி ஆன்லைனில் பதிவு செய்த பிறகே தங்க வைக்க வேண்டும் என மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக சத்துவாச்சாரியில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் விடுதி உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் சிபி ராமகிருஷ்ணன் தலைமை தாங்கிய நிலையில் பொருளாளர் தேஜாமூர்த்தி, செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

கூட்டத்தில் பேசியதாவது, வேலூரில் வெளிமாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களில் மருத்துவ சிகிச்சைக்காக லாட்ஜ் மற்றும் விடுதிகளில் தங்குகிறார்கள். தங்கு வரும்பொழுதே வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம் பாஸ்போர்ட்டை சரிபார்த்து முறையாக பதிவு செய்ய வேண்டும். இது குறித்த விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் சென்றவுடன் காவல் நிலையத்திற்கு தகவல் கூற வேண்டும். பிற மாநிலத்திலிருந்து வருபவர்களிடம் ஆதார் எண்ணை வாங்க வேண்டும். விடுதிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும். விடுதியின் வெளியேயும் இரண்டு கேமராக்களை பொருத்த வேண்டும். மேலும் தங்க வருபவர்களின் விவரங்களை பதிவு செய்த பிறகே விடுதிகளில் தங்க வைக்க வேண்டும். விவரங்கள் இல்லை என்றால் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டது.

Categories

Tech |