Categories
சினிமா தமிழ் சினிமா

சகோதரா…! “என்னோட சைஸ் 34 டி” நெட்டிசனின் கேள்விக்கு…. பிரியா பவானி நெத்தியடி பதில்…!!!!

தமிழ் திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கரிடம் நெட்டிசன் ஒருவர் இன்னர் சைஸ் கேட்டதற்கு அவர் அளித்துள்ள அதிரடி பதில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரியா பவானி சங்கர், ஆரம்பத்தில் ’செய்தி வாசிப்பாளராக’ அறிமுகமாகி, பின்னர் தனியார் தொலைக்காட்சி மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணியாற்றிய பிரியா பவானி சங்கர்  ‘மேயாதமான்’ படம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார். பிறகு  படிபடியாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளர்ந்து உள்ளார். இவர் தற்போது தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ சிம்புவுடன் ’பத்து தல’ அருண் விஜய் உடன் ’யானை’ ராகவா லாரன்ஸ் உடன் ‘ருத்ரன்’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு நெட்டிசன் “உங்களுடைய பிரா சைஸ் என்ன? என்று கேட்ட கேள்விக்கு “நான் 34 டி சைஸ் அணிகிறேன் சகோதரா! என்னுடைய மார்பங்களை நான் ஒன்றும் வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அவை உள்ளன. நீங்கள் ஒருவேளை அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் டி-சர்ட்டுகளை உற்று நோக்குங்கள், அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Categories

Tech |