மேகாலயாவில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை தற்போது 58.61 விழுக்காடாகவும், நாகலாந்தில் 59.29 மெல் காடாகவும், உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேகாலாயாவில் ஆதார் அட்டைகள் பெற்றவர்கள் விகிதம் 2016- ல் 3.6% விகிதமும், 2020-ல் 30.6%, 2022- ல் 48.3 % சதவீதமாக இருந்தது. தற்போது அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அட்டைகளை கட்டாயமாக்கப்பட்ட பின் ஆதார் அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 58.61% உயர்ந்துள்ளது.
சமீப காலம் வரை, அரசு அளிக்கும் உதவிகள், நலத்திட்டங்களை பெற, மேகாலயாவில் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படவில்லை என்பதால், ஆதார் பதிவு விகிதம் மிகக் குறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் மேகாலயாவில் 2023 க்குள் இதை 70 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரளா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா, கோவா, டெல்லி, இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆதார் அட்டை பெற்றவர்கள் எண்ணிக்கை 100 சதவீதமாக உள்ளது.