Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அம்பேத்கார் பிறந்த நாள்… சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய கலெக்டர்…!!!

வேலூரில் அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வேலூரில் நேற்று அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி கலெக்டர் வளாகத்தில் இருக்கின்ற  அம்பேத்கர் சிலைக்கு கலெக்டர் குமரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் அரசு அலுவலர்கள் அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இருக்கின்ற அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |