விபச்சார விடுதியில் சோதனை செய்யும் போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக் கூடாது என்று கர்நாடக உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விபச்சார விடுதியில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தும்போது வாடிக்கையாளர்களை கைது செய்கின்றனர். அப்படி வாடிக்கையாளர்களை கைது செய்யக்கூடாது என்றும், அவர்கள் மீது கடத்தல் வழக்கு தொடர முடியாது எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபச்சார விடுதியில் இருந்ததற்காக போலீசார் கைது செய்தது தவறு என்று கூறி பெங்களூரை சேர்ந்த பாபு என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அவர் மீதான வழக்கை நீதிபதி ரத்து செய்தார். மேலும் போலீசார் விபசார விடுதிகளில் சோதனை செய்யும் போது அங்கிருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக்கூடாது என்றும், அவர்கள் மீது கடத்தல் வழக்கு தொடரக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது,
வாடிக்கையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய கூடாது என்று பல்வேறு வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை நீதிபதி விலகினார். நாடு முழுவதும் சட்ட விரோதமாக பல விபச்சார விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. அவற்றில் சிறுமிகள், இளம் பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தபடுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி பெங்களூரில் ஒரு விபச்சார விடுதி செயல்பட்டு வந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி 3 சிறுமிகளை மீட்டனர். மேலும் விஜயம்மா, கலீம் மற்றும் வாடிக்கையாளர் பாபு ஆகியோர் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து பாபு தொடர்ந்த வழக்கில் விபச்சார விடுதிகளில் சோதனை நடத்தும்போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை கைது செய்யக்கூடாது என்று கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.