மலையடிவாரத்தில் 29 அடி உயரத்தில் இருக்கும் முருகரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.
வேலூர் மாவட்டத்தில் பாலமதி முருகர் கோவில் மலை அடிவாரத்தில் இருக்கின்றது. அங்கு முருகர் சிலையானது 29 அடி கருங்கல்லால் செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். தமிழ் புத்தாண்டு என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி தனசேகர் செய்தார். இதைப் போலவே மாவட்டங்களில் இருக்கும் பல்வேறு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.