Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆணையிட்ட கலெக்டர்….. அதிரடி காட்டிய போலீஸ்….. பாய்ந்தது குண்டாஸ்….!!

கொலை குற்றவாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி அருகே விளாங்கோடு காலணியில் மார்ஷல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மார்ஷல் ஒருவரை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டியுள்ளார். இது தொடர்பாக மார்ஷல் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் குண்டர் சட்டத்தின் கீழ் மார்ஷலை கைது செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி மார்ஷல் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |