ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததால் மதியம் நடை சாத்தப் படவில்லை.
நேற்று சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே வீட்டை சுத்தம் செய்துவிட்டு புத்தாடை அணிந்து கொண்டு குடும்பத்தோடு கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 6 மணி அளவில் நடை திறக்கப்பட்டது.
மூலவர் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்ததால் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மதியம் 3 மணியளவில் நடைமுறை வழக்கமாக சாத்தப்படும் ஆனால் நேற்று பக்தர்கள் ஏராளமானோர் வந்ததால் நடை சாத்தப்படவில்லை.