Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞன்”… கைது செய்த போலீஸார்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமத்தில் இருக்கும் பாண்டியன் நகரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததால் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தார்கள்.

அப்போது போலீசார் அங்கிருந்த ஒரு வீட்டில் 4250 மதிப்பிலான 500 பாக்கெட் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்ததை கண்டு பிடித்தார்கள். போலீசார் விசாரணை செய்தபோது அந்த பகுதியை சேர்ந்த திவாகர் என்பவர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவனை கைது செய்து புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |