வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் விக்டர் வில்லி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள வணிக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் மர்ம நபர்கள் புகுந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் வணிக வளாகம் உடனடியாக மூடப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த சிறுமியின் உடல் நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வணிக வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.