சிம்மம் ராசி அன்பர்களே!!!
இன்று குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள் . உங்களை சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். கனவு நனவாகும் நாள் ஆக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை கொஞ்சம் இருக்கும் சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்று பாடுபடுகிறார்கள் போட்டியில் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று ஓரளவு வெற்றி பெறும் நாளாகத்தான் இருக்கும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இன்று உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஏழு நபர்களுக்கு இன்று தயிர்சாத அன்னதானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள கன்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிஷ்ட்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்