இளையாவயல் ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக இன்று மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கீரனூரில் இருக்கும் திருச்சி-காரைக்குடி இடையிலான ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகளானது இளையாவயல் கேட் பகுதியில் காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடப்பதால் ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் எனவும் போக்குவரத்து வசதிக்காக நார்த்தாமலை இரயில்வே கேட் பகுதியில் ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.