Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு… மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்த இளம் பெண்…. பதைபதைக்கும் வீடியோ…!!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம்மெட்ரோ  ரயில் நிலையம் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதி. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை 25 வயதான பெண் ஒருவர் மெட்ரோ நிலையத்தின் மீது ஏறி குதிக்கப்போவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனை கண்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அந்த பெண்ணை கீழே இறங்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும், அந்த பெண் இறங்க மறுத்து, நான் குதிக்க போவதாக சைகை காட்டி சுவற்றின் விளிம்பில் நின்றுகொண்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார்.

 

பின்னர் உடனடியாக பாதுகாப்பு படை  வீரர் ஸ்டேஷன் கன்ட்ரோலர், லைன் இன்சார்ஜ் போன்றோருக்கு  தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்து ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், எந்த நேரத்திலும் அந்த பெண் கீழே விழலாம் என்ற முடிவுக்கு வந்த பணியாளர்கள் சிலர் தரை தளத்திற்கு வந்து கையில் ஒரு தடிமனான போர்வை விரித்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி, சிறிது நேரத்தில் மேலே இருந்து குதித்த பெண்ணை கீழே போர்வையுடன் இருந்தவர்கள் தாங்கி பிடிக்க முயற்சி செய்தனர். இருப்பினும், பளு தாங்காமல் அந்த பெண்ணுக்கு முதுகு, காலில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக லால் பகதூர் சாஸ்திரி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது சுயநினைவுடன் இருந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கிடையே  வழக்கு பதிவி செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Categories

Tech |