Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒதுக்கி வைத்த மக்கள்… “அய்யனார் சிலை என்று கண்டுபிடித்த ஆய்வாளர்கள்”… நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…!!

குறவன், குறத்தி என்று நினைத்து பராமரிக்காமல் இருந்த அய்யனார் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் சித்துப்பட்டியில் பல்லவர்கால அய்யனார் சிற்பம், பொற்கலை தேவியின் சிற்பம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த சிற்பங்களை அப்பகுதி மக்கள் குறவன், குறத்தி சிலை என்று நினைத்து பல தலைமுறைகளாக வழிபடாமல், பராமரிக்காமல் ஒதுக்கி வைத்தனர். கீரனூரை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய கள ஆய்வின்போது இந்த சிற்பங்கள் கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய அய்யனார் சிற்பம் என்பது தெரியவந்தது.

இந்த சிற்பத்தின் உயரம் 5 அடி, அகலம் 3 அடி. இந்தச் சிற்பம் பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தண்ணீர் ஊற்றி நல்லெண்ணெய் கொண்டு துடைத்து சுத்தம் செய்தனர். இதையடுத்து இந்த சிற்பங்களுக்கு அதே ஊரை சேர்ந்த வேதம் படித்த சுரேஷ் என்பவரால் மந்திரங்கள் படிக்கப்பட்டு சந்தனகாப்பு, பட்டாடை சாத்தி, பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் தொல்லியல் ஆய்வாளர்கள் இந்த சிற்பங்களை தொல்லியல் துறை அல்லது கிராம மக்கள் சார்பாக மேற்கூரையிட்டு வழிபட்டு பராமரித்து வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |