சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபோது பாஜக – விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலுக்கு காரணமான பாஜகவினரை கைது செய்ய வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவர்களுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை,பிரதமர் மோடி அம்பேத்கரின் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாஜக இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி பிரதமர் மோடி அவருடைய வாழ்க்கையை அம்பேத்கர் வகுத்து கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன். இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள் என்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.