விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற மெகா தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். அதன்பிறகு மேயாதமான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. கடைசியாக ஓ மண பெண்ணே, பிளட்மணி படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது பல்வேறு படங்கள் உருவாகி வருகின்றன.
இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவார். மேலும் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டவர். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்தார். அதில் ஒரு ரசிகர் நடிகர் பிரியா பவானி சங்கரிடம், எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர், இயக்குனர் வெற்றிமாறன்.. நான் வெற்றிமாறனின் திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.